இயற்கையின் அதிசயம் – முருங்கை பிசின் தரும் 6 அற்புத நன்மைகள்

இயற்கையின் கொடைகளில் ஒன்றான, நம் வீட்டு முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் "பிசின்" பற்றி உங்களுக்குத் தெரியுமா? நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த முருங்கை பிசினில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன...


murungai keerai podi


இதோ முருங்கை பிசினின் சில முக்கிய நன்மைகள்:


எலும்புகளுக்கு பலம்: 


இதில் உள்ள அதிகப்படியான கால்சியம், மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் அளித்து, எலும்புகளை இரும்பு போல உறுதியாக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தி: 


வைட்டமின் 'சி' நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது...


சளி, இருமலுக்கு குட்பை: 


தொண்டை வலி, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்...


ஆண்களுக்கு ஓர் வரம்: 


ஆண்களின் உடல் நலத்தை மேம்படுத்தி, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இது ஒரு இயற்கை வயாகரா என்றும் சொல்லப்படுகிறது...


murungai keerai podi
murungai keerai podi


  இரத்த சோகைக்கு தீர்வு: 


இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...


சருமப் பொலிவிற்கு: 


சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் தோல் பிரச்சனைகளை சரிசெய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது...


எப்படி பயன்படுத்துவது..?


முருங்கை பிசினை நன்றாக சுத்தம் செய்து, நெய்யில் வறுத்து பொடி செய்து, பாலில் கலந்து குடித்து வரலாம். மேலும், இதை தண்ணீரில் ஊறவைத்தும் பயன்படுத்தலாம்...


இந்த அதிசய முருங்கை பிசினை உங்கள் அன்றாட வாழ்வில் சேர்த்து, அதன் முழுமையான பலன்களையும் பெறுங்கள். ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்..! 

Comments